? ??????????????Red Night? ????? ?? ???Rating: 4.1 (77 Ratings)??37 Grabs Today. 12457 Total Grabs. ??????
Preview?? | ??Get the Code?? ?? ?????????????????????????????????????Color Chaos? ????? ?? ???Rating: 4.5 (19 Ratings)??34 Grabs Today. 21418 Total Grabs. ??????Preview?? | ??Get the BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS ?

Thursday, December 17, 2009

பாரதியார் கவிதைகள்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

இச்ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும் ,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்று விட்ட போதிலும் ,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும் ,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும் ,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

பச்சையூ நியந்த வேற்படைகள் வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே ,

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே .